Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபேஸ்புக் பஞ்சாயத்து : என் குழந்தையாக இருக்கிறாயா? அல்லது ரூம் மேட்டாக மாறுகிறாயா?

முழு நேரமும் ஃபேஸ்புக் தளத்திலேயே மூழ்கி கிடந்த மகனுக்கு தாய் ஒருவர் எழுதிய கடிதம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த எஸ்டல்லா என்ற தாய் தனது 13 வயது மகன் ஆரோனுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயம் இதுதான்...

'' அன்பு மகன் ஆரோனுக்கு, உனக்கு தற்போது 13 வயதுதான் ஆகிறது. எப்போதும் ஃபேஸ்புக்கிலேயே இருக்கிறாய். சொன்ன சொல் கேட்பது இல்லை.  ஒரு தாயாக உன்னை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. உனக்கு ஒரு பாடம் தேவையென்று நான் கருதுகிறேன். அதனால் இனிமேல் உனது தேவைகளை நீதான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். இனிமேல் எனது சுமையிலும் நீ பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனால் வீட்டு வாடகை 430 டாலர், மின்சார செலவு 116 டாலர்,இன்டர்நெட் 21 டாலர், உணவுச் செலவு 150 டாலர்கள் என ஒவ்வொரு மாதமும் நீ  தர வேண்டும்.

இது தவிர திங்கள், புதன், வெள்ளி போன்ற நாட்களில் இனிமேல் நீதான் வீடு மற்றும் பாத்ரூம்களை சுத்தம் செய்ய வேண்டும். இப்போது தினமும் நான்தான் இந்த வேலைகளை உனக்காக செய்து வருகிறேன்.  இனிமேல் நீயும் எனது வேலைகளில் பங்கு கொள்ள வேண்டும். ஒருநாள் இதை செய்யத் தவறினாலும்  30 டாலர் எனக்கு வீட்டு வேலைகளை செய்ததற்காக கூடுதலாக நீ தர வேண்டும். 

நீ என் குழந்தையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது ரூம்மேட்டாக மாறுகிறாயா? பேசி தீர்த்துக் கொள்வோம்..''. இப்படி போகிறது அந்த கடிதம்.

சரி... இந்த கடிதத்தை ஆரோன் என்ன செய்தான் தெரியுமா? ஃபேஸ்புக்கில் போட்டு ஓட்டிட்டு இருக்கிறானாம். இதுவரை  87 ஆயிரம் லைக்குகளையும், ஒரு லட்சத்து 62 ஆயிரம் ஷேர்களையும்  இந்த கடிதம் பெற்றுள்ளது.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close