Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி நேபாளத்தின் தேசிய விலங்கு பசு: அரசு அறிவிப்பு!

காத்மாண்டு: நேபாள நாட்டின் தேசிய விலங்காக `பசு` அறிவிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற நாடாக தமது அரசியல் அமைப்பை மாற்றிக்கொண்ட நேபாள நாட்டின் தேசிய விலங்காக, இந்துக்களின் புனித விலங்கான பசு அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த புதிய அரசியலமைப்புக்கு கீழ் வந்த நேபாள அரசு, இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. மேலும், தேசிய விலங்காக பசு இருப்பதால், அதைக் கொல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்று நேபாளி காங்கிரஸ் பொதுச் செயலாளர் கிருஷ்ண பிரசாத் சித்துலா தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, இறைச்சிக்காகப்  பசுவைக் கொல்வது தடுக்கப்பட வேண்டும் என்று நேபாளத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டு அது நீக்கப்பட்டது. தற்போது,  இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும்   நாட்டில் பசுவதைத் தடுப்புச் சட்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

நேபளாத்தின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் ஒற்றைக் கொம்புள்ள காண்டாமிருகத்தை தேசிய விலங்காக தேர்ந்தெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ