Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை: ஃபேஸ்புக்கில் வீடியோவை பதிவு செய்யும் புதிய கலாசாரம்! (வீடியோ)

குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைக்காமல், பொது மக்களே அடித்து உதைத்து, அந்த காட்சிகளை ஃபேஸ்புக்கில் பதிவு செய்யும் சம்பவம் பெரு நாட்டில் அதிகரித்துள்ளது.

பெரு நாட்டில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் குற்றங்களை குறைப்பதற்கு, காவல்துறையினர் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.


இந்நிலையில் சிலிசியா ரொட்ரிக்ஸ் என்ற பெண்மணி, தனது பக்கத்து வீட்டில் திருட வந்த கொள்ளையனை பற்றி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

எனினும் தாமதமாக வந்த காவல்துறையினர், குற்றவாளியிடம் பணம் வாங்கிக்கொண்டு அவனை தப்ப வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிலிசியா, Catch Your Thief என்று ஃபேஸ்புக்கில் புதிதாக ஒரு பக்கத்தை உருவாக்கினார்.

அதன்படி, குற்றவாளிகளை காவல்துறையினரிடம் ஒப்படைக்காமல் பொதுமக்களே அடித்து உதைத்து,  அந்த புகைப்படங்களையும், வீடியோவையும் இந்த இணைய பக்கத்தில் பதிவேற்றி வருகின்றனர். அதிலும்
சமீப நாட்களாக ஏராளமானோர் குற்றவாளிகளை கொடூரமான முறையில் அடித்து உதைக்கும் காட்சிகளை பதிவேற்றுவது அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே Catch Your Thief பக்கத்தை போன்று 100க்கு மேற்பட்ட பக்கங்கள் முளைத்துள்ளதாக கூறப்படுகிறது. பொது இடத்தில் நிர்வாணமாக நிற்க வைக்கப்படுவது, மிளகாயை சாப்பிட வைப்பது, கொடூரமான முறையில் தாக்குவது என்று இந்த தண்டனைகள் எல்லை மீறி வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் தண்டனை வழங்கும் விவகாரம் கையை மீறி வேறுபாதையில் செல்வதாக சிலிசியாவும் அச்சம் தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ