Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போப் பிரான்சிஸ்!

வாஷிங்டன்: போப் பிரான்சிஸ் நாளை(வியாழன்) அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அமெரிக்க நாடாளு மன்றத்தில் போப் ஒருவர் பேசுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இன்று அமெரிக்கா வந்த போப்பை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், அவரது குடும்பத்தினரும், உற்சாகத்தோடு  வரவேற்றனர்.

மேரிலாண்ட்  மாநிலத்தில் அமைந்துள்ள ஆண்ட்ரூஸ் ஆகாயப் படை விமான தளத்தில் போப்பை வரவேற்கப் பெருந்திரளான மக்கள் கூடினர். அமெரிக்காவில் வாழும் 70 மில்லியன் கத்தோலிக்கர்கள்,  போப்பின் வருகையை மிகப் பெரிய நிகழ்வாகக் கருதுகின்றனர் என்பதால் அவரின் உரையை கேட்க ஆவலோடு காத்திருக்கின்றனர். 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ