Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாற்றுத்திறனாளி ஒருவரை அடித்து உதைத்த போலீஸ்! (வீடியோ)

மாற்றுத்திறனாளி ஒருவரை, போக்குவரத்து காவல்துறையினர் இரண்டு பேர் சேர்ந்து கொடூரமாக தாக்கிய சம்பவம் இலங்கையில் நடந்துள்ளது.


அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய நகருக்கு இருசக்கர வாகனத்தில் ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி ஒருவர் வந்து கொண்டிருந்தார். அப்போது, வாகனத்தை நிறுத்துமாறு போக்குவரத்து காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனால், வாகனத்தை நிறுத்தாமல் சென்ற மாற்றுத்திறனாளியை, விரட்டி சென்று பிடித்த இரண்டு காவல்துறையினர், அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

அப்போது, மாற்றுத்திறனாளி பொருத்தியிருந்த செயற்கை கால் கழன்று விழுந்துள்ளது. காவல்துறையினரின் இந்த மனிதாபிமானமற்ற செயலை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்களே தவிர, அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

பின்னர், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கூறி  மாற்றுத்திறனாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ