Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தற்கொலை தாக்குதலுக்கு முன் பயத்தில் கதறி அழுத தீவிரவாதி (வீடியோ)

சிரியாவில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் கதறி அழுகின்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அல்கொய்தாவுடன் தொடர்பில் உள்ள இந்த அமைப்பு, சிரியாவில் உள்ள இரண்டு கிராமங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முடிவு செய்தது. அதற்காக தங்கள் அமைப்பில் உள்ள ஜாஃபர் அல் தையர் என்ற உஸ்பெகிஸ்தான் நாட்டு இளைஞரை தேர்ந்தெடுத்தனர்.

தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக அவருக்கு பிரியாவிடை அளித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஜாஃபரை மூத்த ஜிகாதிகள் கட்டிப்பிடித்து வாழ்த்துகின்றனர். பின்னர் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட பீரங்கியில் அமர்ந்த அவர், திடீரென கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். அப்போது மூத்த ஜிகாதி ஒருவர், 'தாக்குதல் நடத்த தயங்கக் கூடாது. பயமாக இருந்தால் கடவுளை நினைத்துக்கொள்' என்று கூறுகிறார்.

அதற்கு ஜாஃபர், தான் மரணத்துக்காக பயப்படவில்லை என்றும், நமது முயற்சிகள் தோல்வியடைந்துவிடுமோ என்றுதான் பயப்படுவதாகவும் கூறுகிறார்.

எனினும் மரண பயம் அவரது கண்ணில் தெரிவது வீடியோவில் பதிவாகியுள்ளது. பின்னர் வெடிகுண்டுகளுடன் புறப்பட்டு செல்லும் அந்த பீரங்கி, தூரத்தில் வெடித்து சிதறுவது போன்று அந்த வீடியோ முடிகிறது.

தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close