Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மெக்கா கூட்ட நெரிசலில் சிக்கி 2 இந்தியர்கள் பலி!

மினா: மெக்காவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிந்தவர்களில் 2 பேர் இந்தியர்கள் எனத் தெரியவந்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரான மெக்காவுக்கு, ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ‘ஹஜ்’ புனித பயணம் செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் புனித பயணம் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், ஹஜ் புனித யாத்திரைக்கு வந்தவர்களின் கூட்டம் அதிகமானதால், திடீரென மெக்கா மசூதிக்கு வெளியே கடும் நெரிசல் ஏற்பட்டதாகவும், அதில் சிக்கி 717 பேர் பலியாகி உள்ளதாகவும், 805க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தோனேசியா மற்றும் மலேசியாவை சேர்ந்தவர்கள் என்றும், இந்தியாவை சேர்ந்த யாருக்கும் பாதிப்பில்லை என்றும் இந்திய ஹஜ் கமிட்டித் துணைத்தலைவர் அபுபக்கர் தெரிவித்திருந்தார்.

2 இந்தியர் பலி

ஆனால், இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பேர் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகியுள்ளது தெரியவந்திருக்கிறது. ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த 60 வயதான பிபி ஜான் என்பவரும், கேரளாவைச் சேர்ந்த முகமது என்பவரும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ