Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அந்நிய நேரடி முதலீட்டிற்கான தடைகள் இந்தியாவில் அகற்றப்படும்: அமெரிக்காவில் மோடி பேச்சு!

நியூயார்க்: அந்நிய நேரடி முதலீட்டிற்கான தடைகள் இந்தியாவில் அகற்றப்படும் என்று அமெரிக்க நிறுவன சி.இ.ஓ.க்களிடம் பேசும்போது பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபையின் 70வது அமர்வு, கடந்த 15 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, அயர்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு நியூயார்க் சென்றுள்ளார். ஐ.நா. சபையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிற 'நிலையான வளர்ச்சி' மாநாட்டில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள வால்ட்ரோப் அஸ்டோரியா ஓட்டலில் தங்கி உள்ள பிரதமர் மோடி, அமெரிக்காவின் தலைச்சிறந்த நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். அப்போது, ''ஆட்சியில் சீர்திருத்தம் என்பதற்கே என்னுடைய அரசு முன்னுரிமை வழங்கும். ஆட்சியில் சீர்திருத்தம் என்பதற்கே என்னுடைய முதல் முன்னுரிமை. எளிமையான நடைமுறை, விரைவாக திட்டமிடுதல், வெளிப்படையான மற்றும் பொறுப்பான செயல்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

இந்தியாவில், அந்நிய நேரடி முதலீட்டிற்கான தடைகள் அகற்றப்படும். ரயில்வே, பாதுகாப்புத்துறை மற்றும் ஆயுள் காப்பீட்டு துறைகளில் அந்நிய நேரடி முதலீடுகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். உலக நாடுகள் அந்நிய நேரடி முதலீட்டை குறைத்துவரும் நிலையில் இந்தியா 40 சதவிதமாக அதிகரித்து உள்ளது. இதனுடைய நம்பிக்கையானது இந்திய பொருளாதாரத்தில் பிரதிபலிக்கிறது" என்று கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்