Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிலந்தியை அழிக்க தீ வைத்த போது விபரீதம்: கேஸ் பங்க் பற்றி எரிந்தது(வீடியோ)

நியூயார்க்:  கேஸ் பங்க்கில் காருக்கு எரிவாயு நிரப்பிய நபர் ஒருவர்,தனது காரில் இருந்த சிலந்தியை அழிக்க லைட்டரால் தீ வைத்த போது காரும் கேஸ் நிலையமும் தீ பிடித்து எரிந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள கேஸ் நிலையம் ஒன்றில் அடையாளம் அறியாத நபர் ஒருவர் தனது காருக்கு கேஸ் நிரப்ப அங்குள்ள கேஸ் பங்க்கிற்கு வந்துள்ளார்.அப்போது காரில் உள்ள டேங்க்கின் மீது சிலந்தி ஒன்று இருந்துள்ளது.அதைப் பார்த்த அந்த நபர் உடனே தன்னிடம் இருந்த சிகரெட் லைட்டரால் தீவைத்து அழிக்க முயன்றார்.அப்போது திடீரென்று தீ பற்றி காரும் கேஸ் பங்க்கும் பற்றி எறிந்தது.இதனையடுத்து அந்த நபர் அலறியடித்து ஓடி உயிர் தப்பினார்.

பின்னர் தீ அணைக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்து தொடர்பான  வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்