Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண சிறிசேனாவிடம் பான் கி மூன் வற்புறுத்தல்!

நியூயார்க்: தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணுங்கள் என்று இலங்கை அதிபர் சிறிசேனாவிடம் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வற்புறுத்தி உள்ளார்.

இலங்கை போர்க்குற்றம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஐ.நா. விசாரணை குழு, தனது அறிக்கையை சமீபத்தில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பித்தது. அதில், இலங்கை ராணுவத்தினரின் அத்துமீறல்கள் பட்டியலிடப்பட்டு இருந்தன. போர்க்குற்றம் குறித்து விசாரிக்க சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள், விசாரணை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைக்குமாறு சிபாரிசு செய்தது.

இந்நிலையில், ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இலங்கை அதிபர் சிறிசேனா ஐ.நா.வுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனை சந்தித்தார். அப்போது, இலங்கை தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணுமாறு சிறிசேனாவை வற்புறுத்தினார். அதற்காக தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லுமாறும், நிரந்தர அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் அடித்தளம் அமைக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அறிக்கையின் சிபாரிசுகளை அமல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். அந்த அறிக்கையை வரவேற்று ஆக்கப்பூர்வமாக பணியாற்ற உறுதி பூண்டதற்காக இலங்கை அரசுக்கு பான் கி மூன் பாராட்டு தெரிவித்தார். அதிபர் சிறிசேனாவுடனும், இலங்கை அரசுடனும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close