Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியர்களின் கைவிரல் வித்தை கணினியில் பதிவானது இந்தியாவின் அடையாளம்: மோடி பெருமிதம்!

கலிஃபோர்னியா: இந்தியர்களின் கைவிரல் வித்தை கணினியில் பதிவானது இந்தியாவின் அடையாளம் என்று  கலிஃபோர்னியாவில் அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பேசிய பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கலிஃபோர்னியாவில் அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே உரையாற்றினார். எஸ்.ஏ.பி. அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மோடியின் உரையை கேட்க, சுமார் 18 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூடினர். அவர்கள் மத்தியில் மோடி உரையாற்றும்போது, ''இந்தியா குறித்த உலகின் பார்வை மாறி வருகிறது. இந்தியாவின் திறமைகள் வெளிநாட்டிற்குப் போனதன் நற்பலனை இந்தியா பெறும்.

இந்தியர்களின் கைவிரல் வித்தை கணினியில் பதிவானது இந்தியாவின் அடையாளம்.வெளிநாடு வாழ் இந்தியர்கள் உலகின் சிந்தனைப் போக்கை மாற்றியமைத்தவர்கள். இந்தியர்களின் வளர்ச்சி கலிஃபோர்னியாவில் அபரிதமாக தெரிகிறது.

இந்தியா இனி பின்னுக்கு வராது என்பதை மிகவும் நம்பிக்கையுடன் என்னால் கூறமுடியும். இந்தியா தற்போது மிகவும் வலிமையான நிலையில் உள்ளது. கடந்த 15 மாதங்களில் இந்தியா புதிய உயரத்தை எட்டியுள்ளது. பொருளாதாரத்திலும் வலிமையை எட்டியுள்ளது. கடந்த 6 மாதங்களில் அனைத்து மதிப்பீடு நிறுவனங்களும் இந்தியாவின் பொருளாதாரமானது வேகமாக வளர்ந்து வருகிறது என்று கூறியுள்ளன.

உலகப்பார்வையில் இன்று இந்தியா புதிய அடையாளமாக திகழ்கிறது. இந்தியாவை பார்த்து உலக நாடுகள் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. டிஜிட்டல் துறையில் இந்தியா முன்னணியில் உள்ளது. 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவின் வளர்ச்சிக்கானது.  நாட்டின் வளர்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் பங்களிப்பு முக்கியமானது" என்றார் பெருமிதத்துடன்.

எடிட்டர் சாய்ஸ்