Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸகர்பெர்க் பெற்றோருக்கு பாராட்டு தெரிவித்த மோடி !

லிபோர்னியாவில் ஃபேஸ்புக் தலைமையகத்தில் நடந்த டவுன்ஹால் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உலகத்தை இணைக்கும் குழந்தையை பெற்று தந்ததற்காக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸகர்பெர்க் பெற்றோருக்கு நன்றி தெரிவித்தார்.

சிலிக்கான் வேலிக்கு நேற்று விஜயம் செய்த பிரதமர் மோடி, ஃபேஸ்புக் தலைமையகத்துக்கு சென்றார். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸகர்பெர்க், மோடியை வரவேற்று அலுவலகத்தை சுற்றிக் காட்டினார். பின்னர் ஃபேஸ்புக் பயனாளர்களிடையே பிரதமர் மோடி பேசும் டவுன் ஹால் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர் மோடி,  உலகத்தை இணைக்கும் ஃபேஸ்புக்கை கண்டுபிடித்த மார்க்கை பெற்றெடுத்த பெற்றோரை  காண ஆசைப்படுகிறேன்" என்றார்.

இதையடுத்து அந்த கூட்டத்தில் இருந்த மார்க்கின் பெற்றோர் எட்வர்ட் ஸகர்பெர்க், காரன் கெம்பர் ஆகியோர் பலத்த கரகோஷத்துக்கிடையே எழுந்து நின்றனர்.  மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, '' இந்தியாவில் அரசு நிர்வாகத்தில் நவீன தொழில் நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.  இதனால் அரசு நிர்வாகம் எளிமையாகவும், திறமையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுகிறது. பணத்தை எங்கே முதலீடு செய்வது என்று தெரியாமல் தவிப்பவர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்.  முதலீட்டாளர்களின் சொர்க்கமாக இந்தியா விளங்குகிறது.  தற்போது 8 லட்சம் கோடி டாலராக உள்ள இந்திய பொருளாதாரத்தை 20 லட்சம் கோடி டாலர் அளவிற்கு உயர்த்துவதே எனது இலக்கு " என்றார்.

நிகழ்ச்சி முடிந்ததும், ஃபேஸ்புக் நிறுவனத்தில் அமைக்கப்பட்டிருந்த பேனரில்  குஜராத்தி மொழியில் , "அகிம்சையே மிகப் பெரிய தர்மம். வாய்மையே வெல்லும்" என்று  எழுதி கையொப்பமிட்டார் மோடி.

டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஃபேஸ்புக் ஆதரவு அளிப்பதற்கு அடையாளமாக, அதன் நிறுவனர் மார்க் ஸகர்பெர்க்  தனது அடையாளப்படத்தை இந்தியாவின் மூவர்ணக் கொடி நிறத்தில் மாற்றியுள்ளார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடியும் தனது அடையாளப்படத்தை மூவர்ணக் கொடி நிறத்தில் மாற்றினார்.


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ