Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் மைதானத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்; 9 பேர் பலி!

காபூல் : ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 போலீசார் உள்பட 9பேர்  கொல்லப்பட்டுள்ளனர்; 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில், பாகிஸ்தான் எல்லையோரம்  பாக்டிகா என்ற இடத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. நேற்று இங்குள்ள விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் வீரர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தீவிரவாதி ஒருவர்,மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டுகளை நிரப்பி கொண்டு வெடிக்க வைத்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த தாக்குதலில் 3 போலீசார் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு நங்கார்கார் என்ற பகுதியிலும் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 போலீசார் பலியாகினர்.

கடந்த ஆண்டு இதே மைதானத்தில் நடத்திய தாக்குதலில், கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த 50 பேர் இறந்து போனார்கள். தற்போது ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாட்டு வளர்ச்சி பெற்று வருவதால், அதனை சீர்குலைக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ