Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நட்ட நடு ரோட்டில்... பலரும் பார்க்க... ஒரு ஐ போனுக்காக இப்படியா?

ஹாங்காங்:  தனது பாய் ஃபிரண்ட் ஐ போன் 6 s வாங்கித் தர மறுத்ததற்காக, சீனாவில் இளம்பெண் ஒருவர் நடு ரோட்டில் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர்,  சீனாவின் நான்ஜிங் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது பாய் ஃபிரண்டுடன் பிசியான மார்க்கெட் பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அது,  அடுத்த ஒரு சில தினங்களில் வெளியாக இருக்கும் ஐ போன் 6 s -க்கு பரபரப்பான புக்கிங் நடந்துகொண்டிருந்த நேரம்.  தனக்கு  ஐ போன் 6 எஸ் வாங்கித் தருமாறு தனது பாய் ஃபிரண்டிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்  முடியாது எனக் கூறியுள்ளார்.

 அதனை ஏற்க மறுத்த அந்த பெண், ஏன் வாங்கித் தரமுடியாது  என்று கேட்டு  வாக்குவாதம் செய்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் தொடர்ந்து வாக்குவாதம் செய்தபடியே மார்க்கெட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

ஒருகட்டத்தில் பிடிவாதம் அதிகமான அந்த இளம்பெண் நடு ரோட்டில், தான் அணிந்திருந்த  ஆடைகளை  கழட்டி எறிந்துவிட்டு,  நிர்வாணமாக நின்று பாய் ஃபிரண்டுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனை அங்கிருந்த யாரும் தடுக்க முன்வராமல் வேடிக்கை பார்த்தபடியே சென்றனர். அப்போது அந்த வழியாக சென்ற பெண்மணி ஒருவர்  கவனித்து,  அந்த இளம்பெண்ணை சமாதானம் செய்து கீழே கிடந்த  ஆடைகளை எடுத்துக் கொடுத்து அணிந்து கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

எங்கே போகிறது உலகம்?      

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close