Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீவிரவாத அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள்: பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தல்!

நியூயார்க்: லஷ்கர்–இ–தொய்பா, ஹங்கானி போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுங்கள் என்று பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜ.நா. சபை பொதுக்குழு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்பட ஐக்கிய நாடுகளின் தலைவர்கள் அனைவரும் அமெரிக்க சென்றுள்ளனர். ஜ.நா. சபை கூட்டத்தின்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ், ஷெரீப் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜான் கெர்ரியை சந்தித்து பேசினார்.

அப்போது, பாகிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் லஷ்கர்–இ–தொய்பா மற்றும் ஆப்கானிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹங்கானி போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி நவாஸ் ஷெரீப்பிடம், ஜான் கெர்ரி வலியுறுத்தினார். அதனை ஏற்றுக்கொண்ட நவாஸ் ஷெரீப், ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சு வார்த்தையில் பாகிஸ்தானின் பங்கு இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் பிராந்திய நிலைத்தன்மை மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் ஒப்புக்கொண்டார். இந்த தகவல்களை அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி வெளியிட்டுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ