Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

55 வினாடியில் முழு வேகத்தை எட்டும்: 1,600 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் கார்!

ரு மணி நேரத்திற்கு 1,600 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் சூப்பர்சானிக் கார் லண்டனில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

'பிளட்ஹவுண்ட் சூப்பர்சானிக் ' என்று பெயரிடப்பட்டுள்ள 13.5 மீட்டர் நீளமுள்ள இந்த காரில், இரண்டு வகையான என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஜெட் விமானங்களில் பயன்படுத்தப்படும் ரோல்ஸ் ராய்ஸ் ஈ.ஜே 200 ஒன்றும், ஜாகுவர் வி8 ரக என்ஜினும் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த இரு என்ஜின்களும் இணைந்து, ஒரு லட்சத்து 35 ஆயிரம் குதிரை சக்தியை இந்த காருக்கு அளிக்கின்றன. அதாவது ஒரு பார்முலா ஒன் பந்தயத்தில் ஓடும் மொத்த கார்களின் குதிரை சக்தியை விட இந்த காருக்கு திறன் அதிகம். இயக்கப்பட்ட 55வது வினாடிக்குள், அதன் முழு வேகமான  1609 கிலோ மீட்டர் வேகத்தை எட்டக் கூடிய திறன் இந்த காருக்கு உண்டு.

இதற்கு முன் 1288 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு கார் இயக்கப்பட்டதே அதிகபட்ச சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தென்ஆப்ரிக்காவில் அடுத்த ஆண்டு பிளட்ஹவுண்ட் சூப்பர் சானிக் முறியடிக்கவுள்ளது. தொடர்ந்து 2017ஆம் ஆண்டு இந்த காரை அதன் முழு வேகமான ஆயிரம் மைல் ( 1609 கி.மீ) வேகத்தில் இயக்கிப் பார்க்க இந்த காரை வடிவமைத்த குழுவின் தலைவரான ரிச்சர்ட் நோபிள் திட்டமிட்டுள்ளார். 

பார்முலா ஒன் போட்டியை நடத்தும் சர்வதேச ஆட்டோமொபைல் அமைப்பு , இங்கிலாந்து ராயல் ஆர்மி விமானப்படை மற்றும்  350 நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் இணைந்து பலகட்ட ஆராய்ச்சிக்கு பின் இந்த காரை வடிவமைத்துள்ளன. தற்போது இந்த கார் லண்டனில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.




 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஜல்லிக்கட்டு கானா, விரட்டி பிடித்து கபடி, சுட்டிகளின் முழக்கம்... மெரினா போராட்டத்தின் நேற்றிரவு நிகழ்வுகள்
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close