Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலங்கையில் போர் முடிந்து 6 ஆண்டாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை: ஐ.நா.

ஜெனீவா: இறுதிப் போர் நடந்து 6 ஆண்டுகள் முடிவடைந்து விட்டபோதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என ஐ.நா. மனித உரிமை ஆணையம் குற்றச்சாட்டியுள்ளது.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்டு, அதன் அறிக்கையை கடந்த 16ஆம் தேதி தாக்கல் செய்தது. அதில், போரின்போது, இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் குற்றம் செய்துள்ளன என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்த அறிக்கையின் மீதான பொது விவாதம் இன்று ஜெனீவாவில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினர்.

இதில், ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் ஜைத் ராத் அல் ஹூசைன் காணொலியில் பேசுகையில், ''இலங்கையில் முந்தைய ராஜபக்சே அரசு சர்வதேச தலையீட்டை நிராகரித்தது. அதேபோல், போரின்போது கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் குறித்தும் ராஜபக்சே அரசு விசாரணை நடத்தவில்லை.

அதேபோல், தற்போதைய அரசும் தீவிரவாத தடுப்புச் சட்டத்தில் கைதானவர்களின் விவரங்களை இன்னும் தரவில்லை. இறுதிப் போர் நடந்து 6 ஆண்டுகள் முடிவடைந்து விட்டபோதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அதேபோல், தனியார் நிலத்தை ஆக்கிரமித்துள்ள ராணுவத்தை விலக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

அதேநேரத்தில், தடுப்புச் சட்டத்தைக் விலக்கிக்கொள்ள தற்போதைய இலங்கை அரசு அளித்த உறுதிமொழி வரவேற்கத்தக்கது. இலங்கையின் புதிய ஆட்சியில் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது. புதிய அரசு அமைந்த பிறகு தாக்குதல் குறித்த விசாரணையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது'' என்றார்.

இலங்கை உறுதி

இதையடுத்து, இலங்கை தூதர் ரவிநாத ஆர்யசின்ஹா பேசுகையில், ''அனைத்து மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஐ.நா.வுடன் இணைந்து செயல்படுவோம். சர்வதேச சமூகத்தின் ஆலோசனைகளும், உதவிகளும் பெற்றுக்கொள்ளப்படும்'' என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close