Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இலங்கை போர்க்குற்றம்: அமெரிக்க வரைவு தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை: இலங்கை போரின்போது ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா கொண்டு வந்த வரைவு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்டு, அதன் அறிக்கையை கடந்த மாதம் 16ஆம் தேதி தாக்கல் செய்தது. அதில், போரின்போது, இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் குற்றம் செய்துள்ளன என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டிருந்தன.

இதையடுத்து, இலங்கை போரின்போது நடந்த குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய விசாரணை அமைப்பை இலங்கை அரசே உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய வரைவு தீர்மானம் ஒன்றை, அமெரிக்கா கொண்டு வந்தது.

இந்த தீர்மானத்திற்கு இலங்கையின் ஆதரவு நாடுகளான பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, அந்த வரைவு தீர்மானத்தில் அமெரிக்கா சில திருத்தங்களை செய்துள்ளது.

அதன்படி, சர்வதேச நீதிபதிகள் அடங்கிய விசாரணை அமைப்பு என்பதற்கு பதிலாக காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் அடங்கிய விசாரணை அமைப்பு என்பது போன்ற பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து காமன்வெல்த் நீதிபதிகள் அடங்கிய அமைப்பு விசாரணை செய்யும். இந்த தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.

இந்நிலையில், இந்த அறிக்கையின் மீதான பொது விவாதம் நேற்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நடந்தது. இதில் பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டு இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அமெரிக்காவின் வரைவு தீர்மானம் குறித்தும் பேசினர்.

இந்நிலையில், அமெரிக்காவின் வரைவு தீர்மானம் இன்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பொது வாக்கெடுப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதில் கலந்து கொண்ட பல்வேறு நாட்டு பிரதிநிதிகளில் யாருமே வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுக்கவில்லை.

இதையடுத்து, இலங்கை போரின்போது ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த வரைவு தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ