Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்காவில் கல்லூரியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 மாணவர்கள் பலி!

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவிலுள்ள கல்லூரி ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 மாணவர்கள் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள சமுதாய கல்லூரி இயங்கி வருகிறது. பிரபலமான இந்த கல்லூரியில் 3000க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென அந்த கல்லுரியில் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார். இதில், 10 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அந்த இளைஞரை சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் பலரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இதனால் பலியின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

ஜெனீவாவில் ஐ.நா. பொதுக்கூட்டம் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் தீவிரவாதிகள் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ''தனிநபர் துப்பாக்கி வைத்திருப்பதற்கு எதிரான சட்டங்கள் கொண்டு வரப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close