Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீவிரவாத இயக்கத்துடன் இந்தியாவுக்கு தொடர்பு என்ற பாகிஸ்தானுக்கு சுஷ்மா பதிலடி!

ஜெனிவா: பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத இயக்கங்களுடன் இந்தியா தொடர்பு கொண்டிருப்பதாக ஐ.நா. சபையில் பாகிஸ்தான் குற்றச்சாட்டியுள்ளது.

ஐ.நா பொதுச்சபையில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் காஷ்மீர் பிரச்னை குறித்து பேசினார். இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதிலடி கொடுத்தார்.

இதையடுத்து பேசிய ஐ.நா. சபையின் பாகிஸ்தான் பிரதிநிதி, இந்தியா தான் தீவிரவாதிகளுக்கு துணை புரிகிறது. எங்களது நாட்டில் செயல்படும் தெஹ்ரிக்-இ-தலிபான் தீவிரவாதிகளுடன் இந்திய உளவுத்துறையினருக்கு தொடர்பு இருக்கிறது. இதற்கான ஆதாரங்களை ஏற்கனவே, ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூனிடம் கொடுத்திருக்கிறோம்.

மேலும், பலுசிஸ்தான், கராச்சியில் நடைபெற்ற தீவிரவாத செயல்களுக்கு இந்தியா உதவி செய்ததற்கான ஆதாரமும் எங்களிடம் இருக்கிறது. இரு நாடுகளிடையே பேச்சு வார்த்தை நடைபெறாமல் தடுப்பதற்காக இந்தியா தீவிரவாதத்தை பயன்படுத்துகிறது. பேச்சுவார்த்தையை விரும்பாமல் பாகிஸ்தானில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த இந்தியா முயல்கிறது'' என்றார்.

இதற்கு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசுகையில், ''போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் கூட பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் பிடிபட்டிருக்கின்றனர்.

இதேபோல் மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியையும் பாகிஸ்தான் தங்கள் நாட்டில் சுதந்திரமாக நடமாட விட்டிருக்கிறது. ஒருபுறம் தீவிரவாதத்தை ஊக்குவித்து விட்டு, மறுபுறம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு முன்பு பாகிஸ்தான் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

பாகிஸ்தான் தீவிரவாதத்தை கைவிட்டால் அனைத்து பிரச்னைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக இருக்கிறது'' என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ