Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விடுதலைப்புலிகள் மிகவும் பலத்துடன்தான் உள்ளனர் என்கிறார் சிறிசேனா!

கொழும்பு: விடுதலைப்புலிகளை ஒழித்துவிட்டதாக சொல்வதில் உண்மை இல்லை. அவர்கள் வெளிநாடுகளில் இன்னமும் மிகவும் பலத்துடன்தான் உள்ளனர் என்று இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்து உள்ளார்.

ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு இலங்கை திரும்பிய அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனா,  கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தனது ஜெனீவா பயண அனுபவம் குறித்து அவர் கூறும்போது, ''கடந்த முறை ராஜபக்சே ஐ.நா. கூட்டத்திற்கு சென்றிருந்தார். ஜோதிடர்களின் பேச்சை கேட்டு 2 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலை நடத்தியதால் அவர் தலைவிதி மாறிப்போனது.

இல்லை என்றால் இப்போதும் அவர்தான் இலங்கையின் அதிபராக இருந்திருப்பார். இந்த தடவையும் அவர்தான் ஐ.நா. சபை கூட்டத்துக்கு சென்று இருப்பார். ஆனால், ஜோதிடர்களை ராஜபக்சே கண்மூடித்தனமாக நம்பிவிட்டார். ஜோதிடர்கள் அவரை மூலையில் உட்கார வைத்துவிட்டனர்.

விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்து, ஒழித்து விட்டதாக ராஜபக்சே பீற்றிக் கொள்கிறார். அதில் கொஞ்சமும் உண்மை இல்லை. இலங்கையில் வேண்டுமானால் விடுதலைப் புலிகள் இல்லாமல் இருக்கலாம். வெளிநாடுகளில் இன்னமும் விடுதலைப்புலிகள் மிகவும் பலத்துடன்தான் உள்ளனர்" என்று கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close