Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீது அமெரிக்க விமானம் குண்டுவீச்சு : டாக்டர்கள், நோயாளிகள் 19 பேர் பலி

ப்கானிஸ்தானில் மருத்துவமனை மீது அமெரிக்க விமானம்  தவறுதலாக குண்டு வீசியதில் டாக்டர்கள், நோயாளிகள் உள்பட 19 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் குந்தூஸ் நகரில் 'டாக்டர்ஸ் விதவுட் பார்டர்ஸ் ' என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட மக்களுக்கும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

போரால் பாதிக்கப்பட்ட  ஏராளமான மக்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்,  இந்த மருத்துவமனை மீது அமெரிக்க போர் விமானம் ஒன்று இன்று  அதகாலை 2.15 மணிக்கு குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. குண்டுகள் வெடித்ததில், மருத்துவமனை பற்றி எரிந்தது.

இந்த தாக்குதலில்  மருத்துவர்கள், செவிலியர்கள் 12 பேர்  இறந்து போனார்கள். சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் உள்ளிட்ட 7 நோயாளிகளும் பரிதாபமாக   உயிரிழந்தனர். மேலும் 37 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலின் போது இறந்த 7 நோயாளிகளில் 6 பேர் அப்படியே கட்டிலிலேயே எரிந்த நிலையில் பிணமானார்கள். நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. அவரும் அப்படியே இறந்து போனது தெரிய வந்துள்ளது.

குந்தூஸ் நகரில் இந்த மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் தலிபான்கள் பதுங்கியிருந்தாகவும் அவர்களை அழிக்கும் நோக்கில் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஆனால் தவறுதலாக மருத்துவமனை மீது குண்டு வீசப்பட்டதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே இறந்து போனவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளார். மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். தாக்குதல் நடத்திய அமெரிக்க விமானம் ஏ.சி.130 ரகத்தை சேர்ந்த போயிங் நிறுவன தயாரிப்பாகும்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ