Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மெக்டொனால்ட் உணவகத்தில் இறந்து கிடந்த பெண்மணி: அதிர்ச்சித் தகவல்கள்!

ஹாங்காங்: உலக பிரபல நிறுவனமான மெக்டொனால்ட் உணவகத்தில் வயதான பெண்மணி இறந்துகிடந்தது குறித்து பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சீனாவின் ஹாங்காங் பகுதியைச் சேர்ந்த கொவ்லூன் நகரில் உள்ள மெக்டொனால்ட் உணவகத்தில், வயதான பெண்மணி இறந்துகிடந்தார். அவர் இறந்த விஷயம் சுமார் ஏழு மணிநேரத்துக்கு பின்னரே நிர்வாகத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இருபத்துநான்கு மணிநேரமும் சுற்றுலா பயணிகளின் கொண்டாட்டமாக இருக்கும் கொவ்லூன் நகரில்,  24 மணிநேரமும் இயங்கும் மெக்டொனால்ட் உணவகத்தில்,  ஒரு மேசை மீது சரிந்து கிடந்த வயதான பெண்மணியை  சுமார் 7  மணி நேரமாக யாரும் கண்டுகொள்ளாத விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 2 ஆம் தேதி காலை சுமார் 8.30 மணிக்கு இந்த உணவகத்துக்குள் தனியே நுழைந்த பெண்மணி  நள்ளிரவு ஒன்றரை மணிக்கு தனது மேசை மீது சரிந்து உயிரிழந்துள்ளார். ஆனால் 3 ஆம் தேதி காலை 8.30 மணி அளவில்தான்,  உணவகப் பணியாளர் ஒருவர் கவனித்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

போலீசார் அங்கு வரும்போதும் நிறைய பேர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது. மெக்டொனால்ட் உணவக நிர்வாகி இது பற்றி கூறுகையில்,  "வாடிக்கையாளர்கள் தமக்கு விருப்பமான உணவை தாமே ஆர்டர் செய்து வாங்கி செல்வர். அத்துடன், அவர்களுக்கு இனிமையாக உண்ணும் சூழலுக்காக, வாடிக்கையாளர்கள் தமது தேவைக்காக அழைத்தாலன்றி நாங்கள் தொந்தரவு செய்வதில்லை" என்று கூறியுள்ளார்.

வயதான பெண்மணி இறந்துகிடந்த நிலையிலும் உணவகம் இயங்கிவந்தது ஹாங்காங் வாசிகளிடையே  பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ