Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபேஸ்புக் நிறுவனரின் குழந்தைக்குப் பெயர் சூட்ட மறுத்த சீன அதிபர்!

நியூயார்க்:  ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸகர்பெர்க் மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பெயரிட சீன அதிபர் ஸி ஜிங்பிங் மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்க் ஸகர்பெர்க் காதல் திருமணம் புரிந்துகொண்ட ப்ரஸில்லா சான்,  சீன வம்சாவளிப் பெண் ஆவார்.  அகதியாக அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். ப்ரஸில்லா தன்னுடன் படித்த காலம் முதலே மார்க்,  அவரை காதலித்து வந்தார். மருத்துவ படிப்பு முடித்த ப்ரஸில்லாவை கடந்த 2013 ஆம்  ஆண்டு மார்க் திருமணம் செய்துகொண்டார்.

மூன்று முறை ப்ரஸில்லாவுக்கு கர்ப்பம் கலைந்துவிட்ட நிலையில், தற்போது அவர் மீண்டும் கருத்தரித்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்தில், மனைவியுடன் மார்க் ஸகர்பெர்க்  கலந்துகொண்டார்.

அதே விருந்தில் தனது மனைவியுடன் பங்கேற்ற சீன அதிபரிடம், சீன மொழியிலேயே பேசிய மார்க், அவரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். தனது மனைவியின் வயிற்றில் வளரும் பெண் குழந்தைக்கு, சீன மொழியில் ஒரு நல்ல பெயரை தேர்வு செய்து தருமாறு அவர் கேட்டுக் கொண்டார். எனினும், ‘இது ஒரு மாபெரும் பொறுப்பு’ எனச் சொல்லி, பெயர் எதுவும் வைக்காமலேயே சீன அதிபர்  நழுவி சென்றுவிட்டார்.

சீனாவில், ஃபேஸ்புக்குக்கு தடை விதிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக `வெய்போ` என்ற சமூக வலைத்தளம் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close