Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராணுவத்திடம் இருந்த 615 ஏக்கர் நிலங்களை தமிழர்களிடம் ஒப்படைத்தார் சிறிசேன!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 6 ஆண்டுகளாக இலங்கை ராணுவத்தினரிடம் இருந்த 615 ஏக்கர் நிலத்தை, அதன் உரிமையாளர்களிடம் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒப்படைத்தார்.
 

கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில்  இன்று நடைபெற்ற தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு செயல் திட்டத்தின் தொடக்க விழாவில், அதிபர் மைத்திரிபால சிறிசேன, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

அப்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் 476 ஏக்கர் நிலமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 139 ஏக்கர் நிலமுமாக மொத்தமாக 615 ஏக்கர் நிலத்தை, அதன் உரிமையாளர்களிடம் அதிபர் சிறிசேன ஒப்படைத்தார்.
 

அப்போது பேசிய சிறிசேன, "போர் காலத்தில் படையினரின் பயன்பாட்டுக்காக எடுக்கப்பட்டிருந்த மக்களுடைய நிலங்கள், இன்றைய தினம் மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த செயல் திட்டத்தை நாங்கள் தொடர்ந்து நிறைவேற்றுவோம். இதன்படி மக்களுடைய நிலங்களை மீண்டும் மக்களிடமே வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் நிச்சயமாக எடுப்போம்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ