Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியா-பாக். கிரிக்கெட் போட்டிக்கு சாத்தியமில்லை என்கிறார் சர்தாஜ் அஜிஸ்!

கராச்சி: இந்தியா-பாகிஸ்தான் இடையே நடப்பு சூழலில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவுடன் கிரிக்கெட் உறவை புதுப்பிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. ஐ.சி.சி.யின் வருங்கால போட்டி அட்டவணைப்படி, டிசம்பர் மாதம் பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுடன் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாட இந்திய அணி கொள்கை ரீதியாக ஒப்புக் கொண்டிருந்தது.

இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால், கிரிக்கெட் போட்டி முயற்சிக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. எல்லையில் பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில் இப்போதைக்கு பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி கிடையாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது

ஆனால், வருகின்ற டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி கிரிக்கெட் போட்டித்தொடர் நடத்துவதற்கு இந்தியா முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி வந்த நிலையில், சர்தாஜ் அஜிஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் சர்தாஜ் அஜிஸ் கூறும்போது, ''தற்போதைய சூழலில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிகெட் போட்டிகள் நடைபெறுவதற்கான எந்த வாய்ப்பையும் நான் காணவில்லை. கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக இந்திய அதிகாரிகளிடம் நமது வாரியம் (பி.சி.பி.) தொடர்பில் உள்ளது. எனவே கிரிக்கெட் போட்டி நடைபெறுவது குறித்து அவர்களால் உறுதியாக கூற முடியும். ஆனால், எனக்கு நம்பிக்கை இல்லை" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ