Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பறந்து கொண்டிருக்கும் போது விமானி மரணம்: அவசரமாக தரையிறக்கப்பட்ட அமெரிக்க விமானம்!

றந்து கொண்டிருந்த  விமானத்தில், விமானி மாரடைப்பால்  மரணமடைந்ததால், அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அமெரிக்காவில் ஃபீனிக்ஸ்  நகரில் இருந்து  பாஸ்டன் நகருக்கு இன்று அதிகாலை அமெரிக்கன் ஏர்லைன் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. விமானத்தில் 147 பயணிகளும் 5 சிப்பந்திகளும் இருந்தனர். விமானத்தை கேப்டன் மிக்கேல் ஜான்ஸ்டன் இயக்கினார். விமானம் பறந்து கொண்டிருந்தபோது அதனை இயக்கிய  மிக்கேல் ஜான்ஸ்டனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனால் அவரால் தொடர்ந்து விமானத்தை இயக்க முடியவில்லை. இதையடுத்து நியூயார்க் அருகில் இருந்த சிறிய  விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க உதவி விமானி அனுமதி
கோரினார். நியூயார்க் விமான நிலையத்தில் மருத்துவர்களும் தயார் நிலையில் இருந்தனர்.

நியூயார்க் விமான நிலையத்தில் உதவி விமானி  விமானத்தை பத்திரமாக தரையிறக்கியதும் மருத்துவர்கள், விமானி மிக்கேல் ஜான்ஸ்டனின் உடல் நிலையை பரிசோதித்தனர். ஆனால் மிக்கேல் ஜான்ஸ்டன்  தனது இருக்கையிலேயே மரணமடைந்திருந்தது தெரிய வந்தது.

விமானி மிக்கேல் ஜான்ஸ்டன் 57 வயது நிரம்பியவர். கடந்த 27 ஆண்டுகளாக அமெரிக்கன் ஏர்லைன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ