Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராஜபக்சேவுக்கு தயாராக இருந்த மின்சார நாற்காலி என்னவானது?

கொழும்பு: "ராஜபக்சே அமர்வதற்கு ஆயத்தமாக இருந்த மின்சார நாற்காலியை மெத்தைகளிலான நாற்காலியாக நாங்கள் மாற்றிவிட்டோம்" என இலங்கை சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
 

இலங்கை, களுத்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், "ஒருநாள் நான் ராஜபக்சேவை சந்தித்தேன். அப்போது, 'ராஜித நீங்கள் இவ்வாறு எல்லாம் கூறினீர்களா?' என்று ராஜபக்சே கேட்டார். 'ஆம்,  நான்தான் இவற்றை கூறினேன்... நாங்கள்தான் தங்களை காப்பாற்றினோம்!' என்று கூறினேன்.

ராஜபக்சே மின்சார நாற்காலியில் அமர்வதற்கு மிகவும் விருப்பத்துடன் இருந்தார். இதனால் நாங்கள் அவரது மின்சார நாற்காலியை ஒதுக்கி விட்டு நல்ல மெத்தைகளிலான நாற்காலியை கொண்டு வந்தோம். வரும் 5 ஆண்டுகளுக்கு நல்ல மெத்தைகளிலான நாற்காலியில் அமர்ந்துகொண்டு நாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை பார்க்கலாம்.

இன்று மின்சார நாற்காலி இல்லை.  இன்று இந்த நிலைமை ஏற்படவில்லை என்றால் பொருளாதாரத் தடைகள் ஏற்படும். ஆலைகள் மூடப்பட்டு சுமார் ஒரு மில்லியன் மக்கள் வேலை இழப்பர். அத்தியாவசிய உணவு பெருட்களை பெற்றுக்கொள்ள பணம் இல்லாத நிலைமை, அத்தியாவசியமான மருந்து வகைகளை பெற்றுக்கொள்ள பணம் இல்லாத நிலைமை ஏற்படும். அப்போது மக்கள் வன்முறை பாதைக்கு இறங்க நேரிடும். அப்படியான நிலைமை ஏற்பட்டால் என்ன நடக்கும்?

ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே, 'அண்ணா பயப்பட வேண்டாம்.. எவ்வாறு மரணிப்பதென்று நான் உங்களுக்கு கூறுகின்றேன்!' எனக் கூறுவார். இதுதான் நிலைமை. எனினும் நாங்கள் அதனை மாற்றி விட்டோம்" என்று கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ