Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்மார்ட்போன்களில் தகவல்களை திருடும் இங்கிலாந்து அரசு: அம்பலப்படுத்திய ஸ்னோடன்!

ஸ்மார்ட்போன்களில் புகுந்து, அதில் உள்ள தகவல்களை இங்கிலாந்து அரசு திருடி வருகிறது என்று எட்வர்ட் ஸ்னோடன் பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் உளவு ரகசியங்கள் பலவற்றை உலகுக்கு அம்பலப்படுத்தியவர் எட்வர்டு ஸ்னோடன். தற்போது, ஸ்மார்ட்போன்களில் உள்ள தகவல்களை இங்கிலாந்து அரசு திருடி வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்னோடன் கூறுகையில், "இங்கிலாந்து அரசின் தகவல் தொடர்பு தலைமை அமைப்பு நினைத்தால், உலகின் எந்த மூலையில் இருப்பவரது ஸ்மார்ட் போனுக்குள்ளும் நுழைய முடியும். அவர்கள் போனில் என்ன செய்தி அனுப்புகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை உடனுக்குடன் பதிவு செய்ய முடியும். இதனை ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களே அறிய முடியாது.

மேலும், யாருடைய ஸ்மார்ட் போனில் உள்ள கேமரா மூலமும் புகைப்படம் கூட எடுக்க முடியும். அதனை போனின் உரிமையாளர்கள் தெரிந்து கொள்ளவே முடியாது.

தீவிரவாதிகள் தொடர்பான தகவல்களை அறிய, பாகிஸ்தானில் இருந்துதான் இங்கிலாந்து அரசு அதிக தகவல்களை ரகசியமாக திரட்டியுள்ளது. அமெரிக்காவின் சிஸ்கோ நிறுவனம் தயாரித்த ரூட்டர் கருவிகள் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.

இதனை இங்கிலாந்து அரசு உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. ஆனால் இந்த கண்காணிப்பு அமைப்பு தேவையான ஒன்று, அது கடுமையான சட்டவரம்புக்குள்தான் செயல்படுகிறது என்று கூறியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close