Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாய்குட்டியை பார்க்க அனுமதிக்காத சிறுமியை சுட்டுக் கொன்ற 11 வயது சிறுவன்!

நாய்குட்டியை பார்க்க அனுமதிக்காததால், தனது 8 வயது தோழியை சிறுவன் ஒருவன் சுட்டுக் கொன்ற சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

டென்னசி மாகாணத்தில் நோக்ஸ்வில்லி அருகேயுள்ள  வைட்பின் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்ட  மெக்கல்யாவுக்கும், அந்த மாணவனுக்கும் அருகே அருகே வீடு அமைந்துள்ளது. இருவரும் ஒரே பள்ளியில்தான் படித்து வந்துள்ளனர். மெக்கல்யா 2வது கிரேடும், அந்த மாணவன் 5வது கிரேடும் படித்து வந்துள்ளனர்.கடந்த சனிக்கிழமை மாலை வீட்டருகே இருவரும் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது மெக்கல்யா வளர்த்து வந்த நாய்குட்டியை பார்க்க வேண்டுமென்று அந்த சிறுவன் கேட்டுள்ளான். அதற்கு மெக்கல்யா மறுப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் வீட்டுக்குள் சென்று, தனது தந்தையின்  பிஸ்டலால், மெக்கல்யாவை சுட்டுள்ளான். மார்பு பகுதியில் குண்டு பாய்ந்த நிலையில் சிறுமியின் தந்தை லடாஷா டயர், சிறுமியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மெக்கல்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

துப்பாக்கியால் சிறுமியை சுட்டுக் கொன்ற மாணவனின் பெயர் விபரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.



 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ