Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேலைக்கார பெண்ணுடன் சில்மிஷம்: வீடியோ மூலம் அம்பலப்படுத்திய மனைவிக்கு தண்டனை!

ரியாத்: வேலைக்கார பெண்ணுடன் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட கணவரை ரகசிய கேமிராவைத்து படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய மனைவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவூதி அரேபியாவை சேர்ந்த பெண் ஒருவர் , தனது கணவர், வேலைக்கார பெண்ணுடன் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதை அறிந்து மன வேதனை அடைந்துள்ளார். இதைனையடுத்து அத்துமீறும் தனது கணவரைக் கையும் களவுமாக பிடிப்பதற்காக, செல்போன் கேமராவை கிச்சன் பக்கமாக பொருத்தி வைத்துள்ளார்.

அதில், அவர் எதிர்பார்த்தபடி, கணவர், வேலைக்காரப் பெண்ணிடம் சில்மிஷம் செய்த காட்சிகள்  பதிவாகிவிட்டன. இந்த அதிர்ச்சி தரும் வீடியோவை கண்ட அந்தப் பெண்,தனது  கணவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் வீடியோவை பதிவேற்றம் செய்தார்.அதில், இதுதான் எனது கணவருக்கு என்னால் தர முடிந்த சிறு தண்டனை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், அடுத்தவரின்  அந்தரங்கத்தை சமூக வலைத்தளத்தில் அம்பலப்படுத்துவது சவூதி அரேபியாவில் குற்றம் என்பதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அவருக்கு  மேலும் அந்நாட்டு சட்டப்படி, ஓராண்டு சிறை தண்டனை அல்லது 87,000 ரியால் அபராதம் விதிக்கப்படலாம்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ