Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆசிய பெரும் பணக்காரர்கள் வரிசையில் அம்பானி குடும்பம் 3வது இடம்!

சிங்கப்பூர்: ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 50 இடங்களைப் பிடித்துள்ள குடும்பங்களில், இந்தியாவின் அனில் அம்பானி, அசிம் பிரேம்ஜி உள்ளிட்ட 14 குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டில், ஆசிய அளவில் பெரும்பணக்காரர்கள் பிரிவில் முதல் 50 இடங்களை பிடித்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வணிக இதழ் வெளியிட்டுள்ளது. முதல் 50 இடங்களை பிடித்துள்ள ஆசிய பெரும் பணக்காரர்கள் இந்தியா, சீனா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களில் சுமார் 25 குடும்பத்தினர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

மேலும் அதில், இந்தியாவின் அனில் அம்பானி குடும்பம் 3வது இடத்தை பிடித்துள்ளது. இந்த குடும்பத்தின் நிகர சொத்து மதிப்பு 21.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (இந்திய ரூபாயில் சுமார் 1.3 லட்சம் கோடி) உள்ளது. இவர்களுக்கு அடுத்தப்படியாக, 17 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1.1 லட்சம் கோடி) நிகர சொத்து மதிப்புடன் அசிம் பிரேம்ஜி குடும்பம் 7வது இடத்தையும், 14.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் சுமார் 96 ஆயிரம் கோடி) நிகர சொத்து மதிப்புடன் டாடா குடும்பம் 10வது இடத்தையும் பிடித்துள்ளன.

கோத்ரேஜ், பிர்லா, பஜாஜ் ஆகிய குடும்பங்கள் முறையே 15, 22, 29வது இடங்களை பிடித்துள்ளன. ஸ்ரீ சிமெண்டின் சங்கர் குடும்பம் 42வது, ஜிண்டால் குடும்பம் 43வது, முஞ்சாய் குடும்பம் 46வது, சிப்லாவின் ஹமீட்ஸ் குடும்பம் 50வது இடத்தையும் பிடித்துள்ளன. இதேபோல், ஆசிய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் சாம்சங் குழுமம் முதல் இடத்தில் உள்ளது. 2014 ஆம் ஆண்டில் இந்த குழுமத்தின் மொத்த வருவாய், தென்கொரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 22 சதவீதமாக உள்ளது.

ஆசியா நாடுகளில் வேறு எந்த நாட்டையும்விட, இந்தியா தான் 50 பணக்காரர்களில் 14 இடங்களைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close