Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துருக்கி தலைநகர் அங்காராவில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 100 பேர் பலி!

துருக்கித் தலைநகர் அங்காராவின் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில்100 பேர் பலியாகியுள்ளனர். 
 

அங்காரா நகரின் மத்திய பகுதியில் உள்ள  ரயில் நிலையத்தின் அருகேயுள்ள ஹிப்ட்ரோம் என்ற தெருவில் இன்று காலை அமைதி பேரணி  நடைபெற இருந்தது. 

துருக்கி அரசு குர்தீஷ்  தீவிரவாதிகளுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென கோரிக்கை விடுத்து அந்த நாட்டைச் சேர்ந்த வர்த்தக அமைப்பு ஒன்று  இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பேரணிக்காக அங்கு மக்கள் திரண்டு நின்றுகொண்டிருந்தனர். அப்போது,துருக்கி நேரப்படி காலை 10 மணியளவில் இரு மனித வெடிகுண்டுகள் அந்த பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 100  பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப்  பலியாகினர். 150-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இதற்கிடையே  சிரியாவில்  ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதக்குழுக்களின் 60 நிலைகள் மீது  மீது ரஷ்யா தொடர்ந்து விமானத்தாக்குதல்  நடத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 300க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ