Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழந்தைகளிடம் போர்கள் ஏற்படுத்தும் தாக்கம் ( மனதை உருக்கும் வீடியோ)

போர் என்பது எப்போதுமே  பெரியவர்களின் பிரச்னையாகவே பார்க்கப்படுகிறது. உயிரிழந்தவர்களை விட போரின் தாக்கத்தை தாங்கி உயிருடன்  வாழ முயல்பவர்களுக்கே அதன் வலி அதிகம்.

அதுவும் அகதியாக புது இடத்தில் வாழ்வை தொடங்கியும், கொடூரமான அந்த போரின் நினைவுகளின் பாதிப்பை இந்த சிறு குழந்தையிடம் கூட பார்க்க முடிகிறது. சிரியாவில் இருந்து அகதிகளாக வேறு நாடுகளில் வாழ்பவர்களுக்கு இந்த நிலையே. அயிலான் குர்தி என்ற சிறுவனின் மறைவை உலகமே பேசியது. ஆனால் இன்றளவும் குழந்தைகள் போலீஸ் உடை அணிபவர்களை பார்த்து பயந்து போகிறார்கள். கேமராவை, துப்பாக்கி என நினைத்து கைகளில் உயர்த்திய குழந்தையை உலகம்  நிச்சயம் மறந்திருக்காது.

 

துருக்கி நாட்டில் அகதியாக ஆயிஷா தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு கடைக்கு முன்னே நின்று நாப்கின்கள் விற்கிறார். அப்போது அங்கே வரும் போலீஸ் அதிகாரியை பார்த்து மிரண்டு,  அவ்வழியாக கடந்து போகும் ஒரு பெண்ணின் கால்களை பற்றி அழுகிறார். அந்த போலீஸ் அதிகாரி நல்ல எண்ணத்துடன்தான் தன்னை அணுகுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறது அந்த குழந்தை.

சிரியாவில் குழந்தைகள் தவறு செய்தால், அக்குழந்தைகள் விரலுக்கு முத்தம் கொடுத்து நெற்றில் வைத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும். இதை அந்த அதிகாரிகளிடம் ஆயிஷா செய்து காட்டிய பொழுது அங்கு இருந்தவர்கள் நெகிழ்ந்துவிட்டனர்.

போலீஸ் உடை அணிந்தவர்கள் அனைவருமே கெட்டவர்கள் என  நினைக்கும் அளவுக்கு அந்த குழந்தைக்கு நேர்ந்த துயரங்கள் பற்றி தெரியவில்லை, ஆனால் போரினால் உயிர் சேதம், பொருள் சேதத்தை விட மனதளவில் ஏற்படும் பாதிப்பே அதிகம்.

ஐ.மா.கிருத்திகா

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ