Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாலியல் ரீதியாக சாதகமாக நடப்பவர்களுக்கே வீடு கட்ட நிதி என்கிறார்கள்: குமுறும் தமிழ் பெண்கள்!

கொழும்பு: பாலியல் ரீதியாக தங்களுக்கு சாதகமாக நடப்பவர்களுக்கே வீடு கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறுகின்றனர் என்று தமிழ் பெண்கள் புகார் தெரிவித்துள்ளதாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி கிளை செயலாளர் தம்பு சேதுபதி கூறி உள்ளார்.

இலங்கையில் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டித் தர இந்திய அரசு முன்வந்துள்ளது. அதன்படி 3 ஆண்டுகளில் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளது. இது தவிர, இத்திட்டத்தின் கீழ், போரினால் சேதமடைந்த தங்களது வீடுகளை பயனாளிகள் பழுது பார்த்துக்கொள்ளவும் நிதி உதவி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், வீடுகளை பழுது பார்க்க நிதி ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

'பாலியல் ரீதியாக தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்பவர்களுக்கே வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறியதாக 30க்கும் மேற்பட்ட பெண்கள் எழுத்துப் பூர்வமாகவும், வாய்மொழியாகவும் என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர்' என்று  இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி கிளை செயலாளர் தம்பு சேதுபதி  கூறியதாக இலங்கையில் இருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

மேலும் அதில், கடந்த 2 மாதங்களாக இதுபோன்ற புகார்கள் பெண்களிடம் இருந்து வந்த வண்ணம் உள்ளன. இந்த பிரச்னையின் தன்மை கருதி கொழும்பில் உள்ள இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைமையகத்துக்கு புகார்களை அனுப்பி வைத்திருக்கிறேன் என்றும் தம்பு சேதுபதி குறிப்பிட்டு இருக்கிறார்.

குறிப்பாக, போரினால் இடம் பெயர்ந்த மூலன்கவில் என்னும் இடத்தைச் சேர்ந்த விதவைப் பெண் ஒருவர் செஞ்சிலுவை சங்க அதிகாரிகளுக்கு எதிராக கிளிநொச்சி கிளையில் அளித்த புகாரில், தான் பாலியல் ரீதியாக அதிகாரிகளுக்கு சாதகமாக நடந்து கொண்டால்தான் வீடு கட்டும் திட்டத்தில் நிதி உதவி செய்யப்படும் என்று கூறியதாக, குற்றம் சாட்டி உள்ளார் தம்பு சேதுபதி.

இந்த குற்றச்சாட்டு குறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரக அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இந்தப் பிரச்னையை இந்திய தூதரக அதிகாரிகள் கொழும்பில் உள்ள இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் கொண்டு சென்றுள்ளனர். இதுபற்றி இலங்கை அரசு விசாரணை நடத்தி வருகிறது. இதுபோன்ற எந்த செயலையும் இந்தியா சகித்துக்கொள்ளாது" என்று தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ