Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நெற்றியில் இருந்து கொட்டிய ரத்தத்தை வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ராப் பாடகர்!

லாஸ் ஏஞ்சலெஸ்: தனது நெற்றியில் இருந்து ரத்தம் கொட்டும் காட்சியை வீடியோ எடுத்து, ஃபேஸ்புக்கில் பதிவிட்ட அமெரிக்க ராப் பாடகரின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் காம்ப்டன் நகரைச் சேர்ந்த ராப் பாடகர் தெரிக் ராயல், அங்குள்ள பெட்ரோல் பங்க்கிற்கு சென்றிருக்கிறார். அப்போது அவரது நெற்றில் மூன்று தோட்டாக் குண்டுகள் தாக்கியிருக்கிறது. இதையடுத்து, அவரது நெற்றியில் இருந்து ரத்தம் கொட்டியது.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பதறியடித்து ஓடிவந்து அவருக்கு உதவ முன்வந்திருக்கின்றனர். ஆனால், தெரிக் ராயல், தனது நெற்றியில் இருந்து ரத்தம் கொட்டுவதை, தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். பின்னர், அதை தனது ஃபேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேலும், இதுகுறித்து அவர், ''நான் சுடப்பட்டேன். எனது நெற்றியில் ஏ.கே.47 துப்பாக்கியின் தோட்டாவின் சிதறல் பாய்ந்துள்ளது'' எனக் கூறியுள்ளார்.

இதேபோல், தனது நெற்றியில் பாய்ந்த தோட்டா சிதறல்கள் உள்ள எக்ஸ்ரே படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ