Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓநாய் போல ஊளையிட்டு கின்னஸ் சாதனை படைத்த இங்கிலாந்து ஆர்வலர்கள்! (வீடியோ)

லண்டன்: இங்கிலாந்தில் ஓநாய் ஆர்வலர்கள் ஓநாய் போலவே ஊளையிட்டு கின்னஸ் சாதனை படைத்த சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது.

 

இங்கிலாந்தின் லெய்டன் புசார்ட் நகரின் பூங்காவில் கடந்த சனிக்கிழமை, ஓநாய் பற்றாளர்கள் 464 பேர் ஒன்றுதிரண்டு, ‘ஒரே வார இறுதியில் அதிகம் பேர் ஊளையிட்டதற்கான’ கின்னஸ் சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளனர். இதில் பலர் தமக்கு விருப்பமான ஓநாய்களைப் போல அலங்காரத்துடன் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது, வித்தியாசமான உடை அலங்காரங்களுடன் மக்களால் கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகையை வரவேற்கும் விதத்திலும் அமைந்திருந்தது.

ஏற்கெனவே கடந்த 2013-ம்  ஆண்டு, அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தின் செயின்ட் க்ளவுட் பல்கலைக்கழகத்தில், 296 மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஊளையிட்டு நிகழ்த்திய சாதனையை இவர்கள் முறியடித்து சாதித்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close