Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க சொல்கிறார் விக்னேஸ்வரன்!

கொழும்பு: இலங்கை சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்.

இலங்கையில், கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில், பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். பல தமிழ் அரசியல் தலைவர்களை இலங்கை அரசு விசாரணை இன்றி கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் தங்களுக்கு, இலங்கை அதிபர் மன்னிப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி அவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், இது தொடர்பாக அதிபர் சிறிசேனாவுக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார்.

அதில், ''இலங்கையில் உள்ள பல சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ள 200க்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்கள் அனைவரும் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்கள். ஆனால், இதுவரை அவர்கள் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனவே, அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ