Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

336 பணியாளர்களுக்கு திடீரென 'கல்தா' கொடுத்தது ட்விட்டர்!

நியூயார்க்: செலவீனங்களை குறைக்க 336 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது ட்விட்டர் நிறுவனம்.

ட்விட்டரின் நிறுவனர்களில் ஒருவரான ஜாக் டோர்சி, தலைமை நிர்வாக அதிகாரியாக (சி.இ.ஓ.) பதவியேற்ற ஒரே வாரத்தில், அதன் 8 சதவிகித ஊழியர்களை நேற்று திடீரென பணி நீக்கம் செய்துள்ளார்.

அதிலும், யாரை வேலையிலிருந்து நீக்கப்போகின்றோம் என்கிற அறிவிப்பின்றி, அதிர்ச்சியளிக்கும் விதமாக திடீரென 336 பணியாளர்கள் தங்களது பணியை இழந்துள்ளனர்.

அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ட்விட்டர் நிறுவனம், சக போட்டியாளர்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கைத் தாண்டி பெரிய அளவில் முன்னேற முடியாமல் தவித்து வருகிறது.

அதனால், புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றிருக்கும் ஜாக், அந்நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் விதமாகவும், நிறுவனத்தை மேம்படுத்தும் எண்ணத்திலும் 336 பணியாளர்களை திடீரென பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு, அந்த நிறுவனம் அலுவலக மெயில் மூலமாக தகவல் அனுப்பப்பட்டிருந்தது. ஆனாலும், அந்த மெயிலை அவர்கள் திறந்து பார்க்கும் முன்பே அந்த மெயிலை உபயோகிக்கும் வசதியை ட்விட்டர் நிறுவனம் நிறுத்திவிட்டது.

இதுவரை தனது பயனீட்டாளர்களை 30 கோடிக்கும் அதிகமாக உயர்த்த முடியாத ட்விட்டர் நிறுவனத்திற்கு,  இதன்மூலம் 10 மில்லியன் முதல் 20 மில்லியன் டாலர் வரை (இந்திய மதிப்பில் ஆறரை கோடி முதல் பன்னிரண்டு கோடி ரூபாய்) செலவீனங்கள் குறையும் எனவும், இதைக்கொண்டு நிர்வாகத்தை மாற்றியமைக்கும் திட்டங்களுக்காக செலவிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதில், கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், வீட்டிலிருந்தே இந்நிறுவனத்துக்காக பணிபுரிந்து வந்த பார்ட் என்பவர், நேற்று காலை தனது ட்விட்டர்  அலுவலக மெயிலை திறக்க முயற்சித்தபோதுதான், அவர் தன் பணியை இழந்துள்ளதை உணர்ந்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ