Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புக்கர் பரிசை வென்ற முதல் ஜமைக்கன்!

ங்கில இலக்கிய உலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதான 'மேன் புக்கர்' பரிசை இந்த ஆண்டு ஜமைக்காவை சேர்ந்த மர்லான் ஜேம்ஸ் என்பவர் வென்றுள்ளார்.

5000 பவுண்ட் பரிசு தொகையைக் கொண்ட இந்த விருதைப் பெரும் முதல் ஜமைக்கன்,  மர்லான் ஜேம்ஸ் ஆவார். A Brief History of Seven Killings என்கிற இவரது புத்தகத்திற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.


தனது முதல் நாவலை 70 பதிப்பாளர்கள் நிராகரித்தப் பின்னர், எழுதுவதையே கொஞ்ச காலம் விட்டு விட்ட ஜேம்ஸ், இன்று உலகின் மிகச் சிறந்த எழுத்தாளருக்கான புக்கர் பரிசை தட்டி சென்றுள்ளது விடாமுயற்சிக்கு கிடைத்திருக்கும் விஸ்வரூப வெற்றி. 1969 லிருந்து வழங்கப்பட்டு வரும் இந்த புக்கர் பரிசு இங்கிலாந்து, ஸ்காட்லான்ட், அயர்லாந்த், ஜிம்பாப்வே மற்றும் காமன்வெல்த் நாடுகளில் வாழும் எழுத்தாளர்கள் எழுதும் ஆங்கிலப் படைப்புகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு, இந்தப் பரிசு, உலகில் வாழும் அனைத்து ஆங்கிலப்  படைப்பாளிகளுக்கும் திறக்கப்பட்டது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் எழுத்தாளர் சஞ்சீவ் சஹோதாவும் The Year of the Runaways என்கிற புத்தகத்திற்காக, இந்த ஆண்டிற்கான ஆறு எழுத்தாளர்களை கொண்ட புக்கர் பரிசின் இறுதிப்பட்டியலில் இடம் பிடித்தார்.  புக்கர் பரிசு இறுதிப் பட்டியலில் இடம் பெறுவதே ஒரு விருது வாங்கியதற்கு சமம்தான். எனினும் இறுதியில் இந்த பரிசை மர்லான் ஜேம்ஸ் தட்டி சென்றுள்ளார்.

அருந்ததி ராய் (1997), கிரண் தேசாய் (2006), அரவிந்த் அடிகா (2008) ஆகிய மூன்று இந்தியர்கள் இதுவரை இந்த புகழ்பெற்ற புக்கர் பரிசை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோ. ராகவிஜயா

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ