Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

20 ஆண்டுகளாக பஞ்சுகளை மட்டுமே உண்டு வாழும் வினோத பெண் (வீடியோ)

சமையலறையில் பயன்படுத்தும் பஞ்சுகளை சுவைத்து சாப்பிடும் வினோத பழக்கத்துக்கு பெண் ஒருவர் அடிமையாக உள்ளார்.


இங்கிலாந்தின் வால்சென்ட் பகுதியில் குடியிருந்து வரும் 23 வயதான எம்மா தாம்சன் என்ற இளம்பெண், நாள் ஒன்றுக்கு 20 பஞ்சுகளை சுவைத்து சாப்பிடுகிறார். தனது 3-வது வயதில் குளியலறை பஞ்சை முதன் முறையாக சுவைத்து பார்த்த எம்மா, அதைத் தொடர்ந்து சமையலறையில் பயன்படுத்தும் பஞ்சை சாப்பிடத் துவங்கியுள்ளார்.

பிகா (Pica) எனப்படும் ஒருவித நோயால் பாதிக்கப்படுபவர்கள்,  இதுபோன்று சத்துக்கள் எதுவும் இல்லாத பொருட்களை உணவாக உட்கொள்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாத்திரம் துலக்கும் திரவத்தில் ஏற்கெனவே ஊறப்போட்டு வைத்திருந்த பஞ்சுகளை காலையில் எழுந்ததும் சாப்பிடுவதால் தமக்கு புது தெம்பு கிடைப்பதாக எம்மா கூறுகிறார்.

வாரம் 6 பவுண்டுகள் பஞ்சுக்காகவே செலவிடுவதாக தெரிவித்துள்ள அவர், ''சிலர் புகைக்கின்றனர். அதுபோல் நான் பஞ்சு சாப்பிடுகிறேன். அது தீய பழக்கம் அல்ல'' என நியாயப்படுத்தியுள்ளார்.

சில நேரம் பஞ்சை அப்படியே விழுங்கி விடுவதாக தெரிவித்துள்ள எம்மா, இது ஆப்பிள் பழம் போன்று சுவையாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close