Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடரும் காடுகள் அழிப்பு: மரண விளிம்பில் உராங்குட்டான் இனம்( வீடியோ)

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் தொடர்ந்து காடுகள் அழிக்கப்பட்டு வருவதால் உராங்குட்டான் குரங்கு இனம் அழிவின் விளிம்பில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


இந்தோனேசியாவில் அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீ  மற்றும் உணவின்றியும், வாழ்வாதாரமின்றியும் உராங்குட்டான் இனம் அழிவை சந்தித்து வருகிறது. சுமத்ரா மற்றும் போர்னியோ தீவுகளில் பாம் ஆயில் உற்பத்திக்காக அழிக்கப்படும் இயற்கை வளங்களும், உராங்குட்டான்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளது.

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் நிகழும் இதுபோன்ற கொடுமைகளில் பல உராங்குட்டான்கள் சிக்கி அழிந்து போகின்றது என்றால், இதிலிருந்து தப்பிக்கும் சில உராங்குட்டான்கள்  பட்டினியால் வாடி வதங்கி,மரணத்தை சந்திக்கின்றன.
 

அண்மையில் அட்டைப்பெட்டிக்குள் சடலம் போல வாடிக் கிடந்த உராங்குட்டான் ஒன்று போர்னியோ தீவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ