Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கண்ணகியின் கண்ணீர் மதுரையை எரித்தது போல எங்களின் கண்ணீர் இலங்கையை எரிக்கும்'

யாழ்ப்பாணம்: எங்களின் பிள்ளைகளுக்கு விடிவு கிடைக்காவிடில் கண்ணகியின் கண்ணீர் மதுரையை எரித்தது போல எங்களின் கண்ணீர் இலங்கையை எரிக்கும் என்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயார் தெரிவித்தார்.

சிறைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, யாழ்ப்பாணம் முனியப்பர் கோயிலடியில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ் பெண் ஒருவர் , "என்னுடைய பிள்ளையை 19 வயதில் ராணுவம் பிடித்தது. சந்திரிகா ஆட்சியில் இருந்தபோதே எனது பிள்ளை ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டான். எனது பிள்ளையை விடுவிக்குமாறு நான் ஏறி இறங்காத இடம் இல்லை. ஆனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

எனது பிள்ளையை பார்க்கக்கூட முடியவில்லை. சிறைகளில் எங்களின் பிள்ளைகள் சாப்பிடாமல் இருக்கும் போது ஒரு வாய்கூட சாப்பிடமுடியவில்லை. பச்சைத்தண்ணிதான் குடித்துவிட்டு போராட்டத்துக்கு வந்திருக்கிறேன். எங்களின் பிள்ளைகளுக்கு விடிவு கிடைக்க வேண்டும். அப்படி விடிவு கிடைக்கவில்லை என்றால் கண்ணகியின் கண்ணீர் மதுரையை எரித்தது போல எங்களின் கண்ணீர் இலங்கையை எரிக்கும்" என்று ஆவேசத்துடன் கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்