Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இதுதான் அமெரிக்கா: திருமணத்துக்கு திடீர் விசிட் அடித்த ஒபாமா!

ரு கல்யாணத்தில் என்ன நாடே வியக்கக்கூடிய அளவுக்கு ஹாட் நியூஸ் இருக்கு முடியும்? ஆனால் பாரக் ஒபாமா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டால் இருக்காதா பின்னே?

சில தினங்களுக்கு முன்பு கலிஃபோர்னியாவில் உள்ள டோர்ரே பின்னஸ் கோல்ஃப் மைதானத்தில் ஸ்டிஃபனி என்பவருக்கும் ப்ரையன் டோப் என்பவருக்கும் திருமணம் விழா நடக்கவிருந்தது.

திடீரென்று அங்கு சில போலீஸ் வண்டிகளும், கருப்பு நிற எஸ்.யூ.விகளும் வெளியே பார்க் செய்யப் பட்டிருந்தன. இதை கவனித்த அங்கு கூடி இருந்தவர்கள் அனைவரும், யாரோ பெரிய நபர் வந்திருக்கிறார் என்பதை யூகித்துவிட்டனர்.பார்த்தால், ஸ்டேஜுக்கு கொஞ்சம் தூரம் பின்னாலேயே, அமெரிக்க அதிபர் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

"திருமணத்தை உடனே நடத்தவும், அல்லது சிறிது நேரம் தள்ளிப் போடவும் என செக்யூரிட்டிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். விருந்தினர்கள் அனைவரும், ஒபாமா அவரது 18வது சுற்று முடியும் வரை ஷாம்பெயின் குடித்து காத்திருந்தனர். இதில் அல்டிமேட் காமெடி என்னவென்றால், மணமக்கள் அப்போது ஸ்டேஜிலேயே இல்லை. ஹோட்டல் ஜன்னலின் வழியே இதைப் பார்த்த அவர்கள், சந்தோஷ ஷாக்கில் ஆழ்ந்தனர்.ஸ்டிஃபனி உடனே குழந்தை போல், குடுகுடு என்று ஓட, அவரைப் பின் தொடர்ந்து ஓடினார் ப்ரையன். கீழே சென்றவுடன், அவருடன் கை குலுக்கி, பல புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். "அவர்  மிகவும் அன்பாகவும்,கணிவாகவும் எல்லாருடனும் ஃபோட்டோ எடுத்துக் கொண்டார். அது மட்டுமின்றி. அற்புதமான ஹேன்ட்-ஷேக்கை  கொண்டுள்ளார் !" என அங்கிருந்த போடோகிராபர் எரிக் யங்ரென் தன் ப்ளாகில் எழுதியுள்ளார்.


கடந்த வருடம், ஹவாயில் நடக்கவிருந்த திருமணம் ஒன்று, ஒபாமா அங்கு கோல்ஃப் விளையாடச் சென்றதினால், இடமாற்றம் செய்யப்பட்டது. இதை அறிந்த அவர் மிகவும் வருந்தி, அவர்களுக்கு மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதி, அதோடு தன் வாழ்த்தையும் இணைத்து அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

மு.சித்தார்த்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ