Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நவாஸ்ஷெரீப்பை கொல்ல இந்திய உளவுத்துறை சதி என்கிறது பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் அமைப்புகளான லஸ்கர் இ–ஜாங்வி, தெஹ்ரீக் இ–தலீபான் ஆகியவை அடிக்கடி இந்தியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த இந்திய உளவுத்துறை திட்டமிட்டு இருப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி உள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநில உள்துறை அமைச்சகம், ஒரு ரகசிய சுற்றறிக்கையை பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட தலைவர்களுக்கு அனுப்பி உள்ளது. அதில், ''பிரதமர் நவாஸ்ஷெரீப், ஜமாத் உத்–தவா தலைவர் ஹபீஸ் முகமது சயீத் (இந்தியா தேடி வரும் தீவிரவாதி) ஆகியோரை கொன்று நாடு முழுவதும் பெரும் குழப்பத்தை விளைவிக்க இந்திய உளவுத்துறை சதித்திட்டம் தீட்டி வருகிறது.

எனவே பிரதமர் நவாஸ் ஷெரீப் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார். குறிப்பாக பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின்போது பிரதமர் மிகுந்த உஷாராக இருக்கவேண்டும். இதேபோல், ஜமாத் உத்–தவா தலைவர் ஹபீஸ் முகமது சயீத் பங்கேற்கும் கூட்டங்களிலும் நாச வேலை நடக்கலாம்" என்று கூறப்பட்டு உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close