Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழர்கள் கொல்லப்பட்டது உண்மைதான்: இலங்கை விசாரணைக் குழு தகவல்!

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற போரின்போது தமிழர்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என இலங்கை நாட்டின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதையடுத்து, முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சியின்போது, போர்க்குற்றம் குறித்து விசாரணை செய்தவற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரனகம தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு விசாரணை நடத்தி இலங்கை நாடாளுமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அதில், ''இலங்கையில் நடந்த போரின்போது, ராணுவ வீரர்கள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது உண்மைதான். இந்த போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான நீதி விசாரணை நடத்த வேண்டும். மேலும், இலங்கை நீதித்துறையில் போர்க்குற்றம் பற்றி விசாரிக்க தனி பிரிவு அமைக்க வேண்டும். நம்பத் தகுந்த விசாரணை நடக்க வேண்டுமானால், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு கண்டிப்பாக வேண்டும்.

தமிழர்கள் தூக்கிலிட்டதும் உண்மை

அதேபோல், இறுதிக்கட்ட போரின்போது இலங்கை ராணுவத்தால் தமிழகர்கள் தூக்கிலிடப்பட்டதும் உண்மைதான். சேனல்-4 ஒளிபரப்பிய 'நோ ஃபயர் ஜோன்' ஆவணப்படத்தில் வரும் காட்சிகள் உண்மைதான். அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, சேனல்-4 ஒளிபரப்பு செய்த 'நோ ஃபயர் ஜோன்' ஆவணப்படத்தில் இடம் பெற்ற காட்சிகள் பொய்யானது என இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ