Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அணு ஆயுதங்கள்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஏன் பயப்படவில்லை?

ரும் 2025-ம் ஆண்டுக்குள் பாகிஸ்தானிடம் அணுஆயுதங்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் எனவும், அணு ஆயுத பலம் வாய்ந்த நாடுகள் வரிசையில்,  5வது இடத்துக்கு பாகிஸ்தான் முன்னேறும் என்றும்  அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 1999-ம் ஆண்டு  அமெரிக்காவின் பாதுகாப்புத்துறைக்கான புலனாய்வுத்துறை வெளியிட்டிருந்த அறிக்கையில், பாகிஸ்தானிடம் 60 முதல் 80 வரையிலான அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் இது தற்போது 110 முதல் 130 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. வரும்  2025-ம் ஆண்டுக்குள் பாகிச்தானின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 225 முதல் 250  வரை உயர வாய்ப்பிருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அப்படி உயரும்பட்சத்தில் உலகில் அதிக அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள் வரிசையில் பாகிஸ்தான் 5-வது இடத்துக்கு முன்னேற வாய்ப்பிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது பாகிஸ்தானிடம் 6 வகையான அணு ஆயுதங்கள் உள்ளன.  இது தவிர குறைந்த தொலைவு இலக்கினை தாக்கும்  சாகின் 1ஏ, மீடியம் ரேஞ்ச் வகையிலான சாகின் -3 வகையிலான ஏவுகணைகளை தற்போது பரிசோதித்து வருகிறது.  இது தவிர போர்க்களங்களுக்கு எடுத்து சென்று பயன்படுத்தும் வகையிலான குறைந்த தொலைவு இலக்கினை தாக்கும் பாபர், விமானத்தில் எடுத்து சென்று தாக்கக் கூடிய ஹாட்ப் -7 ரக அணுஆயுத ஏவுகணைகள்  உள்ளன.  நீர் முழ்கி கப்பல்களில் கொண்டு சென்று தாக்கக் கூடிய அணுஆயுத ஏவுகணைகளை கண்டுபிடிப்பதில் தற்போது பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பாகிஸ்தானிடம் உள்ள மற்றொரு அணுஆயுதங்களில் மிகவும் சர்ச்சைக்குரியதாக கருதப்படக் கூடியது,  ஹாட்ப் -9 ரக ஏவுகணைதான். இந்த ஏவுகணை 60 கிலோமீட்டர் சுற்றளவு சென்று தாக்க கூடியது. ஒருவேளை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் மூண்டால்,  இந்திய துருப்புகள் மீது உடனடியாக இதனை ஏவும் வகையில் இந்த ரக ஏவுகணைகளை பாகிஸ்தான் கண்டுபிடித்து வைத்திருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது பாகிஸ்தானிடம் 3,100 கிலோ எரியூட்டப்பட்ட யூரேனியமும், 170 கிலோ புளுட்டோனியமும் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் 200 முதல் 300 அணுஆயுதங்களை பாகிஸ்தான் தயாரிக்கும் திறன் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close