Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

13,500 அடி உயரத்தில் வானில் மிதந்து பிரமிக்க வைத்த சாகச வீரர்கள் ! (வீடியோ)

சாகச பிரியர்களான 61 ஸ்கை டைவ் வீரர்கள் ஒன்றிணைந்து, கலிஃபோர்னியாவில் வானத்தில் மிதந்து சாகசம் செய்து புதிய சாதனை படைத்துள்ளனர்.


பல நாடுகளை சேர்ந்த ஸ்கை டைவ் வீரர்கள் 61 பேர் ஒரு குழுவாக இணைந்து,  அமெரிக்காவின் கலிஃபோர்னியா வானத்தில் இந்த சாதனை நிகழ்வினை நடத்தியுள்ளனர். 3 விமானங்களில் சென்ற இந்த சாகச குழுவினர்,  13,500 அடி உயரத்தில் இருந்து கொத்து கொத்தாக குதித்துள்ளனர்.

பூமியில் இருந்து 5,500 அடி உயரத்தில் வந்ததும்,  அவர்கள் திட்டமிட்டபடி சாகசங்களை நிகழ்த்த துவங்கியுள்ளனர். பார்வையாளர்களை பிரமிப்பூட்டிய இந்த நிகழ்வினை ஒருங்கிணைத்த டயா வீட்ஸ், இது ஒரு மிகவும் சிறிய குழு என்றும், கடினமான இந்த திட்டத்தை செயல்படுத்தியது மிகவும் பாராட்டுதலுக்கு உரியது என்றும் கூறினார்.

இந்த சாகச நிகழ்வில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ரஷ்யா, போலந்து உள்ளிட்ட 12 நாடுகளில் உள்ள பிரபலமான ஸ்கை டைவர்கள் பங்கேற்றனர்.

கடந்த ஜூன் மாதம் 42 ஸ்கை டைவர்கள் ஒன்றிணைந்து கலிஃபோர்னியாவில் நிகழ்த்திய சாகசமே சாதனையாக இருந்தது. தற்போது 61 பேர் ஒன்றிணைந்து நிகழ்த்தி உள்ள இந்த சாகசம் அந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close