Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெடிகுண்டு கண்டுபிடித்ததாக கைதுசெய்யப்பட்ட இஸ்லாமிய மாணவன் கத்தாரில் குடியேற்றம்!

ள்ளிக்கு வெடிகுண்டு கொண்டுவந்ததாக தவறுதலாக கைது ய்யப்பட்ட அமெரிக்க மாணவன் கத்தாரில் குடியேறவுள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள இர்விங் என்ற நகரில் உள்ள மெக் ஆர்த்தர் உயர்நிலைப் பள்ளியில் படித்துவந்த அகமது முகமது என்ற மாணவன்,  தான் கண்டுபிடித்த மின்னணு கடிகாரத்தை பள்ளிக்கு கொண்டுவந்து ஆசிரியரிடம் காட்டினான்.

அதனை வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் 'டைம் பாம்' என்று கருதிய ஆசிரியர்,  போலீசுக்கு தகவல் கொடுத்தார். பள்ளிக்கு வந்த போலீசார், மாணவன் என்றும் பார்க்காமல்,  அவனை கைதுசெய்து காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்றனர்.

இநக்ச் சம்பவம் உலக நாடுகளில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் ஒபாமா, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் உள்ளிட்ட பிரபலங்கள் இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், அந்த மாணவனை விடுவித்தனர்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, அந்த மாணவனை வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில்  கடந்த திங்கட்கிழமை அகமது முகமது, அமெரிக்க அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினான்.

இந்நிலையில், மாணவன் அகமதுவின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' கத்தார் அரசு அகமது முகமதுவுக்கு பள்ளி படிப்பு முதல் பட்டப்படிப்பு வரை ஸ்காலர்ஷிப் வழங்க முன்வந்துள்ளது. இதனால் நாங்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறி, கத்தாரில் குடியேறப் போகிறோம்'' என்று தெரிவித்துள்ளனர்.

 

எடிட்டர் சாய்ஸ்