Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிறக்கும்போது அரைகிலோ எடை இருந்த குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்!

ழே மாதத்தில் பிறந்து அரை கிலோ எடை மட்டுமே இருந்த குழந்தையை, சான்ட்விச் பையில் வைத்து மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர்  ஷரன் கிராண்ட் . 37 வயதான இவர் கருவுற்றிருந்தார். ஏழு மாதக் கருவை ஸ்கேன் செய்து பார்த்தபோது, குழந்தை வளர்ச்சி குன்றியிருந்தது தெரிய வந்தது.  இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அந்தப் பெண் குழந்தை வெறுமனே அரைகிலோ எடை மட்டுமே இருந்தது. மேலும் குழந்தை வெளியே எடுக்கப்பட்ட நிலையில், குழந்தையின்  உடலில் வெப்ப நிலை  குறைந்துகொண்டே இருந்தது. இதனைத் தொடர்ந்து  மருத்துவர்கள், 'டெஸ்கோ சாண்ட்விச்' பையில் வைத்து வெப்பத்தை அதிகரித்தனர்.

தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அந்த குழந்தை இருந்தது.  இதனால் குழந்தையின் உடல் எடை அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது இந்த குழந்தை பிறந்து 5 மாதமாகிறது. இதையடுத்து குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் செல்ல மருத்துவர்கள் அனுமதி அளித்துள்ளனர். தற்போது  மூன்றரை கிலோ  எடையுள்ள இந்த குழந்தைக்கு 'பிக்ஸி 'என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அரை கிலோ எடையுடன் பிறந்த குழந்தை தற்போது ஆரோக்கியமாக இருப்பதால் பிக்ஸியின் பெற்றோர் அளவற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ